Tuesday 30 August 2011

நூற்றி எட்டு போற்றிகள்



விநாயகர் சதுர்த்தி அன்று ,விநாயகரின் 108 போற்றிகளை கூறி வழிபடுவது சிறப்பு .அந்த  நூற்றி எட்டு போற்றிகள் ;
1 .ஓம் அத்தி முகனே போற்றி
2 .ஓம் அம்பிகைச் செல்வா போற்றி
3 .ஓம் அம்மையே அப்பா போற்றி
4 .ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி
5 .ஓம் அமரர்கள்  கோனே போற்றி
6 .ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி
7 .ஓம் அங்குச பாஸா போற்றி
8 .ஓம் அரு உருவானாய் போற்றி
9 .ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி
10 .ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி
11 .ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி
12 .ஓம் அவல்,பொரி,அப்பம் ,அருந்துவோய் போற்றி
13 .ஓம் பிட்டும் ,முப்பழமும் நுகர்வாய் போற்றி
14 .ஓம் ஆதி மூலமே போற்றி
15 .ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி
16 .ஓம் ஆரா அமுதா போற்றி
17 .ஓம் இருள் தனைக் கடிவாய் போற்றி
18 .ஓம் இடையூறு களைவாய் போற்றி
19 .ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி
20 .ஓம் இருவினை அறுப்பாய் போற்றி
21 .ஓம் ஈசனார் மகனே போற்றி
22 .ஓம் ஈரேழாம் உலகா போற்றி
23 .ஓம் உத்தமக் குணாளா போற்றி
24 .ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
25 .ஓம் உண்மை நெறியாளா போற்றி
26 .ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி
27 .ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
28 .ஓம் எங்குமே நிறைவாய் போற்றி
29 .ஓம் என்றுமே  திகழ்வாய் போற்றி
30 . ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி
31 .ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி
32 .ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி
33 .ஓம் எண்குண சீலா போற்றி
34 .ஓம் எழு பிறப்பறுப்பாய்  போற்றி
35 .ஓம் ஏழைப் பங்காளா போற்றி
36 .ஓம் ஏக நாயகனே போற்றி
37 .ஓம் எழில் மிகு தேவே போற்றி
38 .ஓம் ஔவையார்க் கருள்வாய் போற்றி
39 .ஓம் ஐங்கர முடையாய் போற்றி
40 .ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி
41 .ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி
42 .ஓம் நாவலர் பணிவாய் போற்றி
43 .ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி
44 .ஓம் முழு முதற் பொருளே போற்றி
45 .ஓம் ஒளி மிகு தேவே  போற்றி
46 .ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி
47 .ஓம் கணத்து நாயகனே போற்றி
48 .ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி
49 .ஓம் கலைஞானக் குருவே போற்றி
50 .ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி
51 .ஓம் கற்பக களிறே போற்றி
52 .ஓம் கண்கண்ட தேவே போற்றி
53 .ஓம் கந்தனை வென்றாய் போற்றி
54 .ஓம் கனிதனைப் பெற்றாய் போற்றி
55 .ஓம் சங்கத்துத் தமிழே போற்றி
56 .ஓம் சரவணன் தொழுவாய் போற்றி
57 .ஓம் சர்வ லோகேசா போற்றி
58 .ஓம் சாந்தமார் மூர்த்தி போற்றி
59 .ஓம் சுருதியின் முடிவே போற்றி
60 .ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி
61 .ஓம் நம்பிக்கு அருள்வாய் போற்றி
62 .ஓம் நாதனே ,கீதா போற்றி
63 .ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
64 .ஓம் தாயினும் நல்லாய் போற்றி
65 .ஓம் தரும குணாளா போற்றி
66 .ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
67 .ஓம் தூயவர் துணைவா போற்றி
68 .ஓம் துறவிகள் பொருளே போற்றி
69 .ஓம் நித்தனே ,நிமலா போற்றி
70 .ஓம் நீதி சால் துரையே போற்றி
71 .ஒம் நீல மேனியனே போற்றி
72 .ஓம் நிர்மலி வேனியா போற்றி
73 .ஓம் பேழை நல் வயிற்றாய் போற்றி
74 .ஓம் பெரிச்சாளி வாகனா போற்றி
75 .ஓம் பாரதம் வரைந்தாய் போற்றி
76 .ஓம் பாவலர் பணிவாய் போற்றி
77 .ஓம் பாசத்தை அறுப்பாய் போற்றி
78 .ஓம் பாவப்பிணி ஒழிப்பாய் போற்றி
79 .ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
80 .ஓம் முத்தியை தருவாய் போற்றி
81 .ஓம் வேழ முகத்தாய் போற்றி
82 .ஓம் வேட்கையை தணிவிப்பாய் போற்றி
83 .ஓம் வேள்வியின் முதல்வா போற்றி
84 .ஓம் வேதாந்த விமலா போற்றி
85 .ஓம் ஒழுக்கமது அருள்வாய் போற்றி
86 .ஓம் உடல் நலம் தருவாய் போற்றி
87 .ஓம் செல்வம் தருவாய் போற்றி
88 .ஓம் செறுக்கினை அழிப்பாய் போற்றி
89 .ஓம் சிந்தனையை அடக்குவாய் போற்றி
90 .ஓம் சினம் ,காமம் ,தவிர்ப்பாய் போற்றி
91 .ஓம் கல்வியை அருள்வாய் போற்றி
92 .ஓம் கரத்தலை ஒழிப்பாய் போற்றி
93 .ஓம் ஒளவியம்  அகற்றுவாய் போற்றி
94 .ஓம் அறநெறி புகட்டுவாய் போற்றி
95 .ஓம் அவாவினை அடக்குவாய் போற்றி
96 .ஓம் அன்பினை வளர்ப்பாய் போற்றி
97 .ஓம் ஊக்கமது அருள்வாய் போற்றி
98 .ஓம் அமிர்த கணேசா போற்றி
99 .ஓம் ஆக்கம் பெருக்குவாய் போற்றி
100 .ஓம் வலம்புரி விநாயகா  போற்றி
101 .ஓம் வரமெல்லாம் தருவாய் போற்றி
102 .ஓம் சித்தி விநாயகா போற்றி
103 .ஓம் சிவபதம் அருள்வாய் போற்றி
104 .ஓம் சுந்தர  விநாயகா போற்றி
105 .ஓம் சுக போகம் தருவாய் போற்றி
106 .ஓம் அனைத்து ஆனாய் போற்றி
107 .ஓம் ஆபத் சகாயா போற்றி
108 .ஓம் அமிர்த கணேசா போற்றி


பா .சண்முகம்

Friday 3 June 2011

கம்பளி ஞான சித்தர் ;


ஊரை விட்டு சற்று தள்ளி இருந்தது  அந்த பாழடைந்த மண்டபம் ,சுற்றிலும் வெட்ட வெளி ,எங்கும் பயம் கலந்த அமைதி ,மண்டபத்துக்குள் வவ்வால் கூட்டம் இரைச்சலோடு பறக்கும் சத்தம் ,குப்பை கூளங்கள் நிறைந்த அந்த இடத்தில் ஒரே துர்நாற்றம் ,நாய்களின் ஊளைசத்தம் வேறு .மொத்தத்தில் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது அந்த இடம்.

''அவனை இழுத்து வந்து இந்த தூணில் கட்டி போடுங்கள் !!''
நான்கைந்து பேர் இருந்த கூட்டத்தில் தலைவன் போல்  ஒருவன் அப்படி கத்தினான் .
'என்ன,,ஏதாவது சொன்னானா ?''
''இல்லை எது கேட்டாலும் பதில் சொல்லாமல் ஊமையாய் இருக்கிறான் ''
''அந்த சவுக்கை கொடு !!''
சவுக்கை கையில் வாங்கிய தலைவன் ,தூணில் கட்டபட்டிருந்த பெரியவரை அடித்தான் .
''ம்ம் ''உண்மையை சொல் .இரும்பை பொன்னாக்கும் ரகசியத்தை எங்களுக்கு சொல் !!
ஆனால் அந்த ரகசியம் தெரிந்த -கட்டப்பட்டு கிடந்த  பெரியவரிடம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை .
''இவனுக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்காதீர்கள் ''
கை வலிக்க அடித்தவன் களைப்பினாலும் ,விரக்தியாலும் கத்தினான் ''
டேய் !!இங்க வா .ஊருக்குள் சென்று சாப்பிட ஏதாவது வாங்கி வா'' !!
கூட்டத்தில் இருந்த ஒருவன் இந்த கட்டளையை ஏற்று ஊருக்குள் சென்றான் ,அங்கு உணவகத்தில் உணவு பண்டங்கள் வாங்கி கொண்டு வெளியில் வந்தான் .
பக்கத்தில் ஒரு பெட்டி கடை இருந்தது ''அங்கே சென்று ''ஏம்ப்பா ஒரு கட்டு பீடி கொடு !!
கடைக்காரர் கொடுத்த பீடியில் ஒன்றை எடுத்து பற்ற வைத்தான் ,அப்பொழுது ஒருவர் அவன்  தோளை தட்டி ஏம்ப்பா !!கொஞ்சம் நெருப்பு கொடு !!சுருட்டு பற்ற வைக்க வேண்டும் !!திரும்பியவன் அவர் முகத்தை  பார்த்ததும்  தூக்கி வாரி போட்டது அவனுக்கு ,மண்டபத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்தவர் அங்கு நின்று கொண்டிருந்தார் 'தம்பி நெருப்பு கொடுப்பா !!என மீண்டும் சிரித்து கொண்டே கேட்டார் .
ஏதோ பேயை பார்த்து மிரண்டவன் போல மண்டபத்தை நோக்கி அவன் ஓடினான் ,அங்கு தூணில் கட்டப்பட்டு இருந்தவரை நோக்கி அனைவரும் கேள்வி கேட்டு கொண்டிருந்தனர் ,இவனால் அந்த காட்சியை நம்ப முடியவில்லை ,எப்படி ?ஒரே ஆள் இரண்டு இடங்களில்''!!!சித்தம் கலங்கியது போல் குழப்பத்தில் இருந்தான் ,கட்டபட்டு இருந்த பெரியவர் இவனை பார்த்து சிரித்தார் 'அங்கு வெளியில் பார்த்த அதே பெரியவரின் சிரிப்பை போல் இருந்தது அது ..
அங்கு இருந்தவர்களிடம் தான் பார்த்த காட்சியினை கூறினான் அவன் .அனைவரும் ஒரு வித பயத்தோடு பெரியவரை பார்த்தார்கள் .
டேய் !!இவர் சித்து வேலை தெரிந்தவர் போல் இருக்கிறது 'பேசாமல் கட்டை அவிழ்த்து விடுங்கள் என்று கூறினான் தலைவன் .பெரியவர் அவர்களிடம் பிறப்பு ,இறப்பு பற்றியும் ,இவ்வுலகில் ஏதும் நிரந்தரம் இல்லை எனவும் தெளிவாக விளக்கம் அளிக்க!! விட்டால் போதும் என அவர்கள் ஓடிவிட்டார்கள் .
யார் இந்த பெரியவர் ''?
அவர் தான் கம்பளி ஞான சித்தர் ''புதுச்சேரி சித்தர்களுள் ஒருவர் .
எப்பொழுதும் கம்பளியால் தன்  உடலை போர்த்தி இருப்பார் .ரசவாத கலையில் இருந்து அனைத்து சித்துகளையும் பெற்று இருந்தாலும் எப்போதும் சுருட்டு பிடித்தபடி இருப்பார் .
இந்த சித்தர் முதலில் ,மனைவி ,குழைந்தைகள் ,அரசாங்க வேலைகள் என வாழ்ந்து கொண்டிருந்தார் ,வாழ்கையில் எல்லா வசதி வாய்ப்புகள் இருந்தும் ,ஏனோ மன அமைதி மட்டும் இல்லை ,சென்னை யில் இருந்த காரணத்தினால் மன  அமைதி வேண்டி பல கோவில்களுக்கும் ,ஆன்மீக கூட்டங்களுக்கும்,சென்று வந்தார் .அப்போது ஒரு முஸ்லிம் பெரியவரின் தொடர்பு கிடைத்தது ,தான் இந்துவாக இருந்தாலும் அந்த பெரியவர் சொல்லி கொடுத்த அனைத்து ரகசியங்களையும்  கற்று கொண்டார் .
ஒரு நாள் இரவு அயர்ந்து  தூங்கி கொண்டிருந்தார் ,தூக்கத்தில் கனவு ,கனவில் முஸ்லிம் பெரியவர் 'உடனே புதுச்சேரிக்கு செல் ''என்று கட்டளையிட்டார் அவர் .அதன் பின் மறைந்து விட்டார் .
காலையில் எழுந்ததும் முஸ்லிம் பெரியவரை காண சென்றார். ,அனால் அவரை காணவில்லை .அவ்வளவுதான் ,யாரிடமும் சொல்லி கொள்ளாமல் புதுச்சேரிக்கு கிளம்பி விட்டார் .

ஒரு நாள் இந்த சித்தர் கால்  போன போக்கில் ஏனோ தானோ வென்று  எதையோ முணுமுணுத்தபடி சென்று கொண்டிருந்தார் ,நடந்த களைப்பால் தண்ணீர் தாகம் ஏற்பட்டது ,சுற்றும் முற்றும் பார்த்தார் ,ஒரு கள்ளு கடை மட்டும் இருந்தது .அங்கு சென்றார் .

''குடிக்க கள் கொடு ''என்று கேட்டார் .
''முதலில் காசை கொடு -இது கடைக்காரன்
அவ்வளவு தான் !!சித்தருக்கு வந்ததே கோபம் .''உன் கடையில் இன்று முழுவதும் ''கள்'' இருக்கும்''என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் 'அதாவது அன்று முழுவதும் வியாபாரம் நடக்காது என்றார் .
அவர் சொன்னபடியே மதியம் வரை வியாபாரமே நடக்கவில்லை .கடைக்காரன் பயந்து விட்டான் 'ஒரு ஞானியை பிச்சைக்காரன் என்று
துரத்திவிட்டோமே!!என்று வருந்தினான் .சித்தரை தேடி போய் அவரிடம் மன்னிப்பு கேட்டான் ,அவரும் மன்னித்தார் கடையும் களை கட்டியது .
மற்றொரு நாள் சித்தர் தெருவில் சென்று கொண்டிருந்தார் ,செல்லும் வழியில் ஒரு வீட்டில் உணவு சமைக்கும் வாசனை வந்தது ,உடனே அந்த வீட்டு திண்ணையில் போய் அமர்ந்து விட்டார் .சிறிது நேரத்திற்கு பிறகு கதவை தட்டினார் ''தாயே ''...பசிக்கிறது ,அன்னமிடுங்கள் !!என்றார் .''அன்னமா ....இன்று நான் சமைக்கவே இல்லையே .....''என்றாள் அந்த வீட்டு பெண்மணி .
''சற்று  நேரத்திற்கு முன்பு தான் சாதம் வேகும் நல்வாசனை வந்தது தாயே ...''
''கண்ட   பிச்சைக்காரனுக்கு போடுவதற்கு ஒன்றும் நான் சாதம் வடிக்கவில்லை ''என்று கோபத்தில் எரிந்து விழுந்தாள் அந்த பெண் .
சித்தர் போர்த்தி இருந்த சித்தரின் தோற்றம் அவரை அப்படி காண்பித்தது ''
''சரி ..''உங்கள் வீட்டு சாப்பாட்டை  நீங்களே போய்  சாப்பிடுங்கள் ''என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார் அவர் .
வீட்டிற்குள் சென்ற பெண்மணி தான் வடித்து வைத்த  சாதத்தினை சாப்பிட அமர்ந்தார் ,சாதம் தயார் செய்த பாத்திரத்தினுள் கரண்டியால் கிளறிய போது ''அதிர்ச்சியாகி ஓ ''வென அலறினாள்.காரணம் சாதம் முழுவதும் புழுவாக மாறி இருந்தது .
வீட்டிற்கு வந்த அவளது கணவன் விஷயத்தை அறிந்து சித்தரை தேடி சென்றார்கள் .ஒரு மரத்தடியில் கண்கள் மூடிய நிலையில் அமர்ந்து இருந்தார் அவர் .அவர்களின் சத்தம் கேட்டு கண்களை திறந்து பார்த்தார் .எங்களை மன்னித்து விடுங்கள் சாமி !!என்று அவரிடம்  கெஞ்சினார்கள் ''
அவர்களை மன்னித்த சித்தர் ''பசியோடு கேட்பவர்களுக்கு இருப்பதை கொடுங்கள் ''இல்லை என்று விரட்டாதிர்கள் ,இலை போட முடியாவிட்டாலும் ஒரு பிடி சாதமாவது கொடுங்கள் 'அதுதான் நல்லது என்று அறிவுரை வழங்கினார்  .
வீட்டிற்கு அழைத்தனர் அவரை ,பசி தீர்ந்து விட்டது 'என நீங்களே அந்த உணவை சாப்பிடுங்கள் 'நீங்களே இப்போது ஆச்சரியபடுவீர்கள் என்றார்.
அவர் சொனனது போலவே புழுக்களாக மாறி இருந்த சாதம் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது .
இப்படி பலேறு அதிசயங்களை நிகழ்த்திய கம்பளி சித்தரின் மறைவும் மக்களை ஆச்சரியபடவைத்தது.

அன்று காட்டுபகுதி வழியாக நடந்து போய் கொண்டிருந்தார் ,அவரை பாம்பு ஒன்று தீண்டி விட்டது.இதை அறிந்து அந்த பகுதி வழியாக வந்தவர்கள் வைத்தியரை நோக்கி ஓடினார்கள் .தகவல் அறிந்த ஊர் மக்களும் திரண்டு வந்தனர் .ஆனால் சித்தரை மட்டும் காணவில்லை .
கம்பளி சித்தரை தேடி சென்ற போது ஓரிடத்தில் அவரை கடித்த பாம்பு இறந்து கிடந்தது ,சித்தருக்கும் ஏதோ நேர்ந்து விட்டது என்றே அவர்கள் கருதினார்கள் .தீடீர் என்று கூட்டத்தில் இருந்து ஒரு குரல் பரபரப்புடன் ஒலித்தது ''அதோ பாருங்கள் .......ஓடையில் ஒரு உருவம் தெரிகிறது ''.
மொத்த கூட்டமும் ஓடையை நோக்கி சென்றது 'அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிசயமாக தெரிந்தது 'அந்த சித்தர் சில்லென்று ஓடிகொண்டிருந்த நீரின் மேல் பத்மாசன நிலையில் தியானத்தில் அமர்ந்து இருந்தார் .
காண்பது கனவா ?இல்லை நினைவா என்று அனைவரும் பரபரப்பானர்கள் ,ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது .சித்தர் மெல்ல மெல்ல தண்ணீருக்குள் மூழ்க தொடங்கினார் ,இறுதியாக முழுவதுமாக மூழ்கிவிட்டார் .

மக்கள் கூட்டம்  பதறியது  கம்பளி சித்தர் இறந்து போய் விட்டார் என்றே அவர்கள் கருதினார்கள் .மறுநாள் காலை ,அவர்கள் நினைத்தது போலவே சித்தரின் பூத உடல் தியான நிலையில் ஒதுங்கி இருந்தது .ஊர் மக்கள் அந்த சடலத்தை மீட்டு ஓடையின் அருகிலேயே சமாதி எழுப்பினார்கள் .

இன்று அந்த  நினைவிடம் கம்பளி சித்தர் கோவிலாக உருவெடுத்துள்ளது .கம்பளி சித்தர் இன்னமும் மக்கள் குறை தீர்த்து அருளை வாரி வழங்கி கொண்டிருக்கிறார் .
சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி செல்பவர்கள் தட்டாஞ்சாவடி என்று கேட்டு இறங்கி கொள்ளவேண்டும் .அங்கிருந்து தொழிற்பேட்டை வழியாக கம்பளி சித்தர் கோவிலுக்கு செல்லலாம் ,

சித்ரா இங்கர்சால் -சென்னை

(பா .சண்முகம்)    .

Wednesday 1 June 2011

திருவொற்றியூர் கோவில் வரலாறு

கோவிலின் முன் புறதோற்றம்;


கோவிலின் உட்புற தோற்றம் ;
திருவொற்றியூர் வடிவுடை அம்மன் தல புராணம்;
ஒவ்வொரு கோவில்களுக்கும் ஏனைய காரணங்கள் சொல்லபட்டாலும் அவற்றில் ஒன்று

முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் எற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா கேட்ட போது சிவபெருமான் தன் சகதியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்ப கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் ஒரு சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. பிரளய நீரை ஒற்றி எடுத்தமையால் இத்தலத்திற்கு ஒற்றியூர் எனப் பெயர் அமையப் பெற்றது. மற்றொரு காரணமாக இறைவன் வாசுகி என்கிற பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் (ஒற்றிக் கொண்டதால்) அவர் ஒற்றீசர் என அழைக்கப்பட்டு இத்தலம் ஒற்றியூர் என அழைக்கப்பட்டது. பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும், பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் லிங்கத் திருமேனி புற்று மண்ணால் ஆனது. வருடத்தில் 3 நாட்களைத் தவிர மற்ற நாட்களில் லிங்கம் கவசத்தால் மூடியே இருக்கும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத பெளர்ணமி நாளில் கவசம் திறக்கப்பட்டு 3 நாட்களுக்கு இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நாட்களில் இறைவனை புற்று வடிவமாகக் கண்டு தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

Tuesday 31 May 2011

ஆலய தரிசனம்

ஆலய தரிசனம்

நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்



கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள நஞ்சன்கூடு என்ற ஊரில் கோவில் கொண்டுள்ள சிவ  பெருமான் 'நஞ்சுண்டேஸ்வரர் 'என்று அழைக்கப்படுகிறார்.

பொதுவாக சிவன் கோவில்களில் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி அன்று தான் ,சிவ லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வார்கள் ,ஆனால் இங்கு தினசரி  பூஜையின் போது லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.விஷத்தின் வடிவமான கேசியன் என்ற அசுரனை அழித்த காரணத்தால் சிவபெருமான் இங்கு உக்கிரமாக இருப்பதாகவும்,அந்த உக்கிரத்தை குறைக்கும் விதமாக இந்த அபிஷேகம் செய்யபடுவதாகவும் சொல்கிறார்கள் .

மேலும் இங்குள்ள இறைவனுக்கு சுக்கு ,வெண்ணெய்,சர்க்கரை ,இவை மூன்றும் கலந்த 'சுகண்டித சர்க்கரை 'என்னும் மருந்தையும் நைவேத்தியம் செய்கிறார்கள் .
சகல நோய்களையும் குணமாக்குபவராக நஞ்சுண்டேஸ்வரர் அருளுவதால் இவருக்கு ''ராஜ வைத்தியர் 'என்ற பெயரும் உண்டு .
அம்பாள் பார்வதி ,இங்கு சிவனுக்கு இடப்புறம் தாட்சாயணியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.இந்த சன்னதியில் வீரபத்திரரும் எழுந்தருளியிருப்பது  விசேஷம் .


இக்கோவிலின் வரலாறு ;
ஒருமுறை தட்சன் ,சிவபெருமானை அவமதித்து யாகம் நடத்தினான் .அப்போது ,தாட்சாயணி (பார்வதி )யாகத்தை நிறுத்த சென்றாள்.
அங்கு தட்சன் அவளை அவமதிக்கவே யாகத்தை நிறுத்துவதற்காக யாக குண்டத்தில் வீழ்ந்தாள்.அந்நேரத்தில் சிவபெருமான்,தனது உக்கிரத்தில் இருந்து வீரபத்திரரை உருவாக்கி யாகத்தை அழிக்க அனுப்பினார்.
அவர் தட்சன் மேற்கொண்ட யாகத்தை அழித்ததோடு,அவனது தலையையும் கொய்தார்,மேலும் உக்கிரம் குறையாத வீரபத்திரர் ,யாகத்தில் விழுந்த தாட்சாயணியை தோளில் தூக்கி கொண்டு நடனமாடினார் ,அந்த வேளையில் தட்சன் மனைவி பிரசுத்தாதேவி ,
சிவ பெருமானிடம் வந்து முறையிட்டாள்.
தவறு செய்த கணவரையும் ,மகள் தாட்சாயணியையும் உயிர்ப்பித்து அருளும் படி வேண்டினாள்.
அவளது வேண்டுகோளை ஏற்ற சிவன் தட்சணையும், தாட்சாயணியையும் உயிர்ப்பித்தார்.தட்சன்,பிரசுத்தாதேவி இருவருக்கும் தாட்சாயணியுடன் சேர்ந்து காட்சிதந்தார். 


இந்த நிகழ்வின் அடிப்படையிலே இந்த தலத்தில் வீரபத்திரர் ,தாட்சாயணியுடன் அருள் பாலிக்கிறார்.
வேண்டுதல் நிறைவேறியவர்கள் இங்குள்ள இறைவனுக்கு பஞ்சாமிர்த்தம் மற்றும் அன்னத்தால் அபிஷேகம் செய்கிறார்கள் .வில்வ இலை மற்றும் வெற்றிலையால் மாலை செய்து அணிவித்து ,தயிர் சாதம் படைத்து வழி படுவோரையும் காண முடிகிறது .
முன்வினை பாவம் ,தெரியாமல் செய்த பாவம் ஆகியவை இத்தலத்து இறைவனை வழிபடுவதன் மூலம் நிவர்த்தியாகிறது என்கிறார்கள் .
முக்கியமாக ,விஷக்கடியால் பாதிக்கபட்டவர்கள்,தீராத வியாதியால் அவதிபடுபவர்கள் இங்கு வேண்டி கொள்ள ,அவர்கள் விரையில் குணமடைவதாகவும் கூறுகின்றனர் .

பா.சண்முகம்
 

Monday 30 May 2011

இனிமை மனதில்தான் !!!!!



ஒரு முறை பாபு சாகிப்ஜோப் என்கிற பக்தர் ஷீர்டி சாய்பாபாவுக்காக தனது தோட்டத்தில் மாங்காய்களை பறித்தார்,அவை ஓரிரு நாளில் பழுத்து விடும் எனும் நம்பிக்கையில் பறித்துவிட்டார் ,ஆனால் பறித்த  பிறகு தான் அவை பழுக்க கூடுதல் நாட்கள் ஆகும் என்பது தெரிந்தது ,
இதை அடுத்து பாபாவை பார்க்கவரும் வழியில் கடைக்கு சென்று நன்கு கனிந்த மாம்பழங்களை வாங்கிகொண்டார் ,பாபாவை சந்தித்தவர் ,அந்த  கனிந்த மாம்பழங்களை அவருக்கு காணிக்கையாக கொடுத்தார் ,ஆனால் பாபா அவற்றை எடுத்து கொள்ள மறுத்துவிட்டார் .
''கடையில் வாங்கி வந்ததை எனக்கு கொடுக்கிறாயே ?உன் தோட்டத்து பழங்களை எனக்கு தரக்கூடாதா?''என்று கேட்டார் .
பாபு சாகிப்ஜோக்கும் நடந்ததை கூறியதோடு,தனது தோட்டத்தில் பறித்து வந்த மாங்காய்களையே மறுபடியும் எடுத்து வந்து பாபாவிடம் கொடுத்தார் .
அந்த மாங்காய்களுள் ஒன்றை எடுத்து கடித்த பாபா,''இது எவ்வளவு இனிப்பாக இருக்கிறது என வியந்தார் .
அதோடு ,சில மாங்காய்களை கத்தியால் நறுக்கி தன்னை காண வந்த பக்தர்களுக்கும் கொடுத்தார் .பாபாவின் அருளால் பிரசாதமாக மாறிய மாங்காய் துண்டுகள் வழக்கத்தை விட கூடுதலாய் இனித்தன.
அப்போது பாபா சொன்னார் .....
''பழங்களின் இனிமை ஒருவரது மனதில் தான் இருக்கிறது !!''

Friday 27 May 2011

கருட புராணம்


ஒரு உயிர் போன பின் செய்ய வேண்டிய கருமங்களை பற்றி கருட புராணம் இப்படி கூறுகிறது .இறந்த உயிர் பிரேத ஜென்மம் எடுக்கும் ,இறப்பதற்கு முன்பே ஒவொருவருக்கும் பிரேத ஜென்மம் எடுத்தாலும் முக்தியை நோக்கி சென்றிட தோதாக 'விருஷேஷ சர்க்கம் 'என்னும் தான தர்மங்களை செய்ய வேண்டும் ,எப்படி கட்டு சாதமுடன் பயணம் செய்பவன் பசியறியாது பயணிப்பானோஅப்படித்தான் தர்மம் செய்தவன் உயிர் தான தர்மத்தால் விளைந்த புண்ணியத்துடன்இறந்த பிறகு பசி ,தாகமற்று செல்ல வேண்டிய இடம் செல்வான் தானா தர்மங்களில் தலையானது உத்தம பிராமணனுக்கு சோறிடுவது ,அவனை ஏமாற்றாமல் இருப்பது அடுத்து பசுவை போஷிப்பது ,அதை தானமாக பிறருக்கு கொடுப்பது இவைகளை செய்த ஒருவன் உயிர் உடம்பை விட்டு பிரிந்த பின் நற்கதியை நோக்கியே செல்லும் ,அதே சமயம் இறந்தவன் சார்பாக அவனது உற்றார்,உறவினர்களும் இந்த தர்ம காரியங்களில் ஈடு பட வேண்டும் .

கருட புராணம்