Tuesday, 31 May 2011

ஆலய தரிசனம்

ஆலய தரிசனம்

நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்



கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள நஞ்சன்கூடு என்ற ஊரில் கோவில் கொண்டுள்ள சிவ  பெருமான் 'நஞ்சுண்டேஸ்வரர் 'என்று அழைக்கப்படுகிறார்.

பொதுவாக சிவன் கோவில்களில் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி அன்று தான் ,சிவ லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வார்கள் ,ஆனால் இங்கு தினசரி  பூஜையின் போது லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.விஷத்தின் வடிவமான கேசியன் என்ற அசுரனை அழித்த காரணத்தால் சிவபெருமான் இங்கு உக்கிரமாக இருப்பதாகவும்,அந்த உக்கிரத்தை குறைக்கும் விதமாக இந்த அபிஷேகம் செய்யபடுவதாகவும் சொல்கிறார்கள் .

மேலும் இங்குள்ள இறைவனுக்கு சுக்கு ,வெண்ணெய்,சர்க்கரை ,இவை மூன்றும் கலந்த 'சுகண்டித சர்க்கரை 'என்னும் மருந்தையும் நைவேத்தியம் செய்கிறார்கள் .
சகல நோய்களையும் குணமாக்குபவராக நஞ்சுண்டேஸ்வரர் அருளுவதால் இவருக்கு ''ராஜ வைத்தியர் 'என்ற பெயரும் உண்டு .
அம்பாள் பார்வதி ,இங்கு சிவனுக்கு இடப்புறம் தாட்சாயணியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.இந்த சன்னதியில் வீரபத்திரரும் எழுந்தருளியிருப்பது  விசேஷம் .


இக்கோவிலின் வரலாறு ;
ஒருமுறை தட்சன் ,சிவபெருமானை அவமதித்து யாகம் நடத்தினான் .அப்போது ,தாட்சாயணி (பார்வதி )யாகத்தை நிறுத்த சென்றாள்.
அங்கு தட்சன் அவளை அவமதிக்கவே யாகத்தை நிறுத்துவதற்காக யாக குண்டத்தில் வீழ்ந்தாள்.அந்நேரத்தில் சிவபெருமான்,தனது உக்கிரத்தில் இருந்து வீரபத்திரரை உருவாக்கி யாகத்தை அழிக்க அனுப்பினார்.
அவர் தட்சன் மேற்கொண்ட யாகத்தை அழித்ததோடு,அவனது தலையையும் கொய்தார்,மேலும் உக்கிரம் குறையாத வீரபத்திரர் ,யாகத்தில் விழுந்த தாட்சாயணியை தோளில் தூக்கி கொண்டு நடனமாடினார் ,அந்த வேளையில் தட்சன் மனைவி பிரசுத்தாதேவி ,
சிவ பெருமானிடம் வந்து முறையிட்டாள்.
தவறு செய்த கணவரையும் ,மகள் தாட்சாயணியையும் உயிர்ப்பித்து அருளும் படி வேண்டினாள்.
அவளது வேண்டுகோளை ஏற்ற சிவன் தட்சணையும், தாட்சாயணியையும் உயிர்ப்பித்தார்.தட்சன்,பிரசுத்தாதேவி இருவருக்கும் தாட்சாயணியுடன் சேர்ந்து காட்சிதந்தார். 


இந்த நிகழ்வின் அடிப்படையிலே இந்த தலத்தில் வீரபத்திரர் ,தாட்சாயணியுடன் அருள் பாலிக்கிறார்.
வேண்டுதல் நிறைவேறியவர்கள் இங்குள்ள இறைவனுக்கு பஞ்சாமிர்த்தம் மற்றும் அன்னத்தால் அபிஷேகம் செய்கிறார்கள் .வில்வ இலை மற்றும் வெற்றிலையால் மாலை செய்து அணிவித்து ,தயிர் சாதம் படைத்து வழி படுவோரையும் காண முடிகிறது .
முன்வினை பாவம் ,தெரியாமல் செய்த பாவம் ஆகியவை இத்தலத்து இறைவனை வழிபடுவதன் மூலம் நிவர்த்தியாகிறது என்கிறார்கள் .
முக்கியமாக ,விஷக்கடியால் பாதிக்கபட்டவர்கள்,தீராத வியாதியால் அவதிபடுபவர்கள் இங்கு வேண்டி கொள்ள ,அவர்கள் விரையில் குணமடைவதாகவும் கூறுகின்றனர் .

பா.சண்முகம்
 

Monday, 30 May 2011

இனிமை மனதில்தான் !!!!!



ஒரு முறை பாபு சாகிப்ஜோப் என்கிற பக்தர் ஷீர்டி சாய்பாபாவுக்காக தனது தோட்டத்தில் மாங்காய்களை பறித்தார்,அவை ஓரிரு நாளில் பழுத்து விடும் எனும் நம்பிக்கையில் பறித்துவிட்டார் ,ஆனால் பறித்த  பிறகு தான் அவை பழுக்க கூடுதல் நாட்கள் ஆகும் என்பது தெரிந்தது ,
இதை அடுத்து பாபாவை பார்க்கவரும் வழியில் கடைக்கு சென்று நன்கு கனிந்த மாம்பழங்களை வாங்கிகொண்டார் ,பாபாவை சந்தித்தவர் ,அந்த  கனிந்த மாம்பழங்களை அவருக்கு காணிக்கையாக கொடுத்தார் ,ஆனால் பாபா அவற்றை எடுத்து கொள்ள மறுத்துவிட்டார் .
''கடையில் வாங்கி வந்ததை எனக்கு கொடுக்கிறாயே ?உன் தோட்டத்து பழங்களை எனக்கு தரக்கூடாதா?''என்று கேட்டார் .
பாபு சாகிப்ஜோக்கும் நடந்ததை கூறியதோடு,தனது தோட்டத்தில் பறித்து வந்த மாங்காய்களையே மறுபடியும் எடுத்து வந்து பாபாவிடம் கொடுத்தார் .
அந்த மாங்காய்களுள் ஒன்றை எடுத்து கடித்த பாபா,''இது எவ்வளவு இனிப்பாக இருக்கிறது என வியந்தார் .
அதோடு ,சில மாங்காய்களை கத்தியால் நறுக்கி தன்னை காண வந்த பக்தர்களுக்கும் கொடுத்தார் .பாபாவின் அருளால் பிரசாதமாக மாறிய மாங்காய் துண்டுகள் வழக்கத்தை விட கூடுதலாய் இனித்தன.
அப்போது பாபா சொன்னார் .....
''பழங்களின் இனிமை ஒருவரது மனதில் தான் இருக்கிறது !!''

Friday, 27 May 2011

கருட புராணம்


ஒரு உயிர் போன பின் செய்ய வேண்டிய கருமங்களை பற்றி கருட புராணம் இப்படி கூறுகிறது .இறந்த உயிர் பிரேத ஜென்மம் எடுக்கும் ,இறப்பதற்கு முன்பே ஒவொருவருக்கும் பிரேத ஜென்மம் எடுத்தாலும் முக்தியை நோக்கி சென்றிட தோதாக 'விருஷேஷ சர்க்கம் 'என்னும் தான தர்மங்களை செய்ய வேண்டும் ,எப்படி கட்டு சாதமுடன் பயணம் செய்பவன் பசியறியாது பயணிப்பானோஅப்படித்தான் தர்மம் செய்தவன் உயிர் தான தர்மத்தால் விளைந்த புண்ணியத்துடன்இறந்த பிறகு பசி ,தாகமற்று செல்ல வேண்டிய இடம் செல்வான் தானா தர்மங்களில் தலையானது உத்தம பிராமணனுக்கு சோறிடுவது ,அவனை ஏமாற்றாமல் இருப்பது அடுத்து பசுவை போஷிப்பது ,அதை தானமாக பிறருக்கு கொடுப்பது இவைகளை செய்த ஒருவன் உயிர் உடம்பை விட்டு பிரிந்த பின் நற்கதியை நோக்கியே செல்லும் ,அதே சமயம் இறந்தவன் சார்பாக அவனது உற்றார்,உறவினர்களும் இந்த தர்ம காரியங்களில் ஈடு பட வேண்டும் .

கருட புராணம்

கருட புராணம்



இறந்து விட்ட ஒருவன் ஆன்மா மேலுலகை நோக்கி செல்கையில் ''வைதரணி 'என்னும் ஒரு ஆற்றை கடக்க வேண்டும் அந்த ஆற்றை பசு மாட்டின் வாலை பிடித்துக்கொண்டு தான் கடக்க முடியும் ,அல்லாத பட்சத்தில் அந்த ஆறே மல மூத்திரமாய் கொடும் பிராணிகள் நட மாடும் சகதியாக திகழ்ந்து ஆற்றில் இறங்க விடாது தடுக்கும் ,வைதரணி யை கடக்கா விட்டால் மேலுலகம் செல்ல முடியாது ,பூவுலகில் பிரேத ஜென்மமாய் பிறந்த இடத்தையே சுற்றி சுற்றி வர வேண்டியது தான் ..

கருட புராணம்

Tuesday, 24 May 2011

திருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது)

நூறு வகை மலர் பெயர்கள்


1.காந்தள்
2.ஆம்பல்
3.அனிச்சம்
4.குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8.தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10.உந்தூழ்
11.கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13.சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91.  ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94.  நரந்தம்
95. நாகப்பூ
96.  நள்ளிருணாறி
97.  குருந்தம்
98.  வேங்கை
99.  புழகு

மனிதாபிமானம்

கேவலமான உணர்வுக்கும் ,உயர்ந்த உணர்வுக்கும் நடுவே சராசரி மனிதன் நிற்கிறான் .மிருகத்தை பார்க்கும் போது மனிதாபிமானத்தின் மீது பற்று வருகிறது ,மனிதனை பார்க்கும் போது தெய்வம் தேவை படுகிறது ,எல்லோருமே தெய்வங்களாகி விட்டால் தெய்வ தத்துவம் செத்துப்போகும் .எல்லாருமே மிருகங்கள் ஆகிவிட்டால் தெய்வமே பயனற்று போகும் .நடுவே நிற்கும் மனிதன் உலக இயக்கத்தின் பிதாவாகிறான் ,அவனை பார்த்தே தெய்வங்களும் ,மிருகங்களும் உணரப்படுகின்றன .அதனால் தான் மிருகத்திற்கும் ,தெய்வத்திற்கும் நடுவே உள்ள மனிதனிடம் ஒரு அபிமானத்தை வளர்க்க இந்து மதம் முயற்சி எடுத்தது .இதன் பெயரே மனிதாபிமானம் .
-கவியரசு கண்ணதாசன் .

வாரியாரின் 'பய பக்தி'

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளிடம் ஒரு வழக்கம் இருந்தது ,வெளியூருக்கு
சொற்பொழிவுக்காக காரில் செல்லும் போது, வழியில் தென்படும் சின்ன சின்ன கோவில்களின் முன்பு கூட காரை நிறுத்தி பயபக்தியுடன் சாமி கும்பிடுவார் .
ஒரு சமயம் இது பற்றி அவரிடம் கேட்டபோது ''ஒவ்வொரு கோவிலாக காரை நிறுத்தி சாமி கும்பிடுவது பக்தி .கார் டிரைவர் தூங்கிட்டாரா அல்லது விழித்திருந்து கார் ஓட்டுகிறாரா என்று பார்த்து அவருக்கு விபூதி பூசுவது பயம் .இப்போது புரிகிறதா பயபக்தி ?என்றாராம்.

பா .சண்முகம்

லிங்கத்தில் அதிசிய காட்சி

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அங்காடிபுரம் என்ற ஊரில் திருமாந்தம் குன்னு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது .இங்குள்ள சிவலிங்கத்தினுள் சிவபெருமானும் ,பார்வதி தேவியும் காட்சி அளிப்பது தனி சிறப்பு.
1600 ஆண்டுகள் பழமை  வாய்ந்த இந்த கோவிலில் அமைந்துள்ள சிவலிங்கம் ,இறைவனால் அருளப்பட்ட ,பார்வதி தேவி பூஜித்து வந்த லிங்கம் என்கிறார்கள் .இந்த சிவலிங்கத்தை பார்வதிக்கு தெரியாமலே தனது பக்தனும் ,சூரிய வம்சத்தை சேர்ந்த வேலத்ரி மகாராஜாவான மன்மதாவிற்க்கு வழங்கி விட்டார் சிவபெருமான்.
இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி ,தனது அம்சமான பகவதியிடம் கூறி ,இந்த லிங்கத்தை பூலோகத்தில் இருந்து கைலாயத்திற்கு எடுத்து வர பணிந்தார் .லிங்கத்தை பகவதி எடுக்க முயன்றபோது ,அதை மன்மதா தடுத்தான் ,லிங்கத்தை கெட்டியாக பிடித்து கொண்டான்.
ஆனாலும் பகவதி அதை விடவில்லை ,மன்மதாவின் பிடியில் இருந்து லிங்கத்தை விடுவிக்க முயன்ற போது ,அந்த லிங்கமே இரு கூறாக பிளந்தது .பிளவுபட்ட இடத்தில் ஜோதி வடிவில் சிவபெருமானும் ,பார்வதி தேவியும் தோன்றி காட்சி அளித்தனர் .மன்மதாவின் தீவிர பக்தி காரணமாக தான் பூஜித்து வந்த அந்த லிங்கத்தை விட்டு கொடுத்தார் பார்வதிதேவி என்கிறது இக்கோவில் வரலாறு .
இன்றும் இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம்  பிளவு பட்ட நிலையிலேயே உள்ளது .இதனுள் தான் சிவனும் ,பார்வதியும் காட்சி தருவதாக ஐதிகம் .

பா .சண்முகம்

பரிசுத்த உணவு

சுவாமி விவேகானந்தர் துறவறம் மேற்கொண்ட போது ,அவருடன் மேலும் பத்து பேர் சன்னியாசியாக வாழ்கையை தேர்வு செய்தனர் ,சன்னியாசம் மேற்கொண்ட விவேகானந்தர் உள்ளிட்டவர்கள் முதன் முதலாக யாசகம் கேட்டது அன்னை சாரதா தேவியிடம் தான் .அவர் அவர்களுக்கு ஒரு ரூபாய் யாசகம் செய்தார் .
அதன் பின்னர்,விவேகானந்தர் உள்ளிட்டோர் வெளியில் யாசகம் கேட்க சென்றனர் ,அப்போது பலவிதமான அனுபவங்கள் அவர்களுக்கு கிடைத்தன ,சில இடங்களில் அரிசி ,பருப்பு ,காய்கறிகள்  கிடைத்தன ,இன்னும் சில இடங்களில் ''உடம்பு நல்லாதானே இருக்கு''பிச்சை எடுத்து சாப்பிட வெட்கம் இல்லையா ?என்று வசை பாடினார்கள் ,
ஒரு வழியாக கிடைத்த பொருட்களை கொண்டு போய் ராமகிருஷ்ணரிடம் கொடுத்தனர் ,அவர் அன்னை சாரதா தேவியிடம் கொடுத்து சமைக்குமாறு கூறினார் .
சிறிது நேரத்தில் உணவு தயாரானது .சமைத்த உணவில் சிறிது எடுத்து வாயில்  போட்டுக்கொண்ட ராமகிருஷ்ணர்''இந்த உணவு மிகவும் தூய்மை யானது ''என்றார் அவரை தொடர்ந்து நரேந்திரர் உள்ளிட்ட பிற சீடர்கள் அந்த உணவை உட்கொண்டனர் .