Tuesday, 24 May 2011

லிங்கத்தில் அதிசிய காட்சி

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அங்காடிபுரம் என்ற ஊரில் திருமாந்தம் குன்னு பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது .இங்குள்ள சிவலிங்கத்தினுள் சிவபெருமானும் ,பார்வதி தேவியும் காட்சி அளிப்பது தனி சிறப்பு.
1600 ஆண்டுகள் பழமை  வாய்ந்த இந்த கோவிலில் அமைந்துள்ள சிவலிங்கம் ,இறைவனால் அருளப்பட்ட ,பார்வதி தேவி பூஜித்து வந்த லிங்கம் என்கிறார்கள் .இந்த சிவலிங்கத்தை பார்வதிக்கு தெரியாமலே தனது பக்தனும் ,சூரிய வம்சத்தை சேர்ந்த வேலத்ரி மகாராஜாவான மன்மதாவிற்க்கு வழங்கி விட்டார் சிவபெருமான்.
இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி ,தனது அம்சமான பகவதியிடம் கூறி ,இந்த லிங்கத்தை பூலோகத்தில் இருந்து கைலாயத்திற்கு எடுத்து வர பணிந்தார் .லிங்கத்தை பகவதி எடுக்க முயன்றபோது ,அதை மன்மதா தடுத்தான் ,லிங்கத்தை கெட்டியாக பிடித்து கொண்டான்.
ஆனாலும் பகவதி அதை விடவில்லை ,மன்மதாவின் பிடியில் இருந்து லிங்கத்தை விடுவிக்க முயன்ற போது ,அந்த லிங்கமே இரு கூறாக பிளந்தது .பிளவுபட்ட இடத்தில் ஜோதி வடிவில் சிவபெருமானும் ,பார்வதி தேவியும் தோன்றி காட்சி அளித்தனர் .மன்மதாவின் தீவிர பக்தி காரணமாக தான் பூஜித்து வந்த அந்த லிங்கத்தை விட்டு கொடுத்தார் பார்வதிதேவி என்கிறது இக்கோவில் வரலாறு .
இன்றும் இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம்  பிளவு பட்ட நிலையிலேயே உள்ளது .இதனுள் தான் சிவனும் ,பார்வதியும் காட்சி தருவதாக ஐதிகம் .

பா .சண்முகம்

No comments: